

மதுரை:
மதுரை சக்கிமங்கலம் மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் நிதியா (வயது30). இவர் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
எனக்கும், சோழவந்தானை சேர்ந்த சுரேஷ்குமார் (38) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 24 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டன.
தற்போது கணவர் சுரேஷ்குமார் வேறு பெண்ணுடன் சேர்ந்து கொண்டு சித்ரவதை செய்வதோடு கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார். இதற்கு உடந்தையாக அவரது பெற்றோர் மகாலிங்கம் -பஞ்சவர்ணம் மற்றும் உறவினர்கள் உடந்தையாக உள்ளனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் கிரேசி சோபியா விசாரணை நடத்தி பாலமுருகனை கைது செய்தார்.