மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர்
Published on

மதுரையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விரும்பியபடி எம்.ஜி.ஆர். அவர்கள் மிகவும் நேசித்த மதுரை மாநகருக்கென சிறப்பு தனி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்த திட்டம் சுமார் 156 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெரியார் அணை லோயர் கேம்ப் பகுதியிலிருந்து பெரிய ராட்சத குழாய்கள் மூலம் சுமார் 17 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும்.

மதுரை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பெயரை சூட்ட வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், மதுரை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் விடுத்த கோரிக்கையினை அரசு உடனடியாக ஏற்று, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்- மக்கள் தலைவராக – தமிழகத்தின் முதலமைச்சராக 40 வருடங்களுக்கு முன் அதாவது – 30.06.1977ல் பதவியேற்ற இதே நன்னாளில் மதுரை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com