கஜா புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் முறையீடு

கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து, உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் ஒருவர் முறையிட்டார். #GajaCyclone #NationalDisaster #HCMaduraiBench
கஜா புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் முறையீடு
Published on

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் கடுமையாக சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கஜா புயலை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி வழக்கறிஞர் அழகுமணி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டார்.

அவரது கோரிக்கையை பரிசீலனை செய்த நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் இன்று மதியம் விசாரிப்பதாக தெரிவித்தனர். எனவே, வழக்கறிஞர் அழகுமணி மனு தாக்கல் செய்ய உள்ளார். #GajaCyclone #NationalDisaster #HCMaduraiBench

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com