மதுரையில் இன்சூரன்சு அலுவலகத்தில் திடீர் தீ விபத்து

மதுரை இன்சூரன்சு அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அலுவலக ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
தீ விபத்து
தீ விபத்து
Published on

மதுரை:

மதுரை வடக்குவெளி வீதியில் உள்ள அடுக்குமாடி வணிக வளாகத்தின் 2-வது தளத்தில் நே‌ஷனல் இன்சூரன்சு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை ஊழியர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்தனர்.

மேலாளர் அறையை திறந்த பியூன், அங்கிருந்த ஏ.சி.யை ஆன் செய்தார். பின்னர் அவர் அந்த அறையை சுத்தம் செய்தார்.

அப்போது திடீரென ஏ.சி. அறையில் புகை வந்தது. சற்று நேரத்தில் அங்கு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அலுவலக ஊழியர்கள் அலறியடித்து ஓடினர்.

தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பெரியார் மற்றும் அனுப்பானடி தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 வண்டிகளில் வந்த வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மின்சார கோளாறு காரணமாக தீ விபத்து நடந்ததாக கூறப்பட்ட நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com