மதுரையில் ஆட்டோ மோதி கமல் ரசிகர் பலி

மதுரையில் ஆட்டோ மோதி கமல் ரசிகர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த வருகின்றனர்.
மதுரையில் ஆட்டோ மோதி கமல் ரசிகர் பலி
Published on

மதுரை:

மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் நந்தகுமார் (வயது22). டிப்ளமோ படித்துள்ள இவர் நடிகர் கமலின் தீவிர ரசிகர்.

மதுரை ஒத்தக்கடையில் கடந்த 21-ந் தேதி பொதுக் கூட்டத்தை நடத்தி புதிய கட்சியை கமல்ஹாசன் அறிவித்தார். இதில் பங்கேற்பதற்காக அன்று மாலை நந்தகுமார் தனது மோட்டார் சைக்கிளில் ஒத்தக்கடைக்கு புறப்பட்டார்.

மாட்டுத்தாவணி அருகில் உள்ள புதூர் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வேகமாக வந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட நந்தகுமார் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நந்தகுமார் பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த வருகின்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com