மதரசாக்களை கல்வித்துறையின் கண்காணிப்பில் கொண்டு வர இலங்கை அரசு முடிவு

ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதல்களை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள மதரசாக்கள் கல்வித்துறையின் கண்காணிப்பில் கொண்டு வரப்படும் என இலங்கை பிரதமர் அறிவித்துள்ளார்.
மதரசாக்களை கல்வித்துறையின் கண்காணிப்பில் கொண்டு வர இலங்கை அரசு முடிவு
Published on

கொழும்பு நகரில் ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைப்படை தாக்குதலில் 250-க்கும் அதிகமான உயிர்களை பறித்த தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்தது.

விசா காலம் முடிந்தும் இலங்கையில் தங்கி இருந்த சுமார் 200 இஸ்லாமிய போதகர்கள் உள்பட 600 வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், முஸ்லிம்கள் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் மதரசாக்களை (இஸ்லாமிய கல்விக் கூடங்கள்) இனி கல்வித்துறையின் கண்காணிப்பில் கொண்டு வரப்படும் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இலங்கை மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள இஸ்லாமிய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் சம்மதத்துடன் இதை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், இலங்கையில் இஸ்லாமிய சட்ட (ஷரியா) பல்கலைக்கழகம் அமைக்கவும் அனுமதி அளிக்க முடியாது. இதற்கான அதிகாரம் எங்கள் கையில் கிடையாது எனவும் ரணில் விக்ரமசிங்கே குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இயங்கிவரும் மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழத்துக்கு இனி மட்டக்களப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என பெயர் மாற்றவும் செய்யவும் ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை விசாரித்த உண்மை கண்டறியும் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com