காக்னிசன்ட் மீதான வரி ஏய்ப்பு வழக்கு- ரூ.450 கோடி வருமான வரி செலுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு

மென்பொருள் நிறுவனமான காக்னிசன்ட் 2,500 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ரூ.450 கோடி வருமான வரி செலுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Cognizant #india
காக்னிசன்ட் மீதான வரி ஏய்ப்பு வழக்கு- ரூ.450 கோடி வருமான வரி செலுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு
Published on

புதுடெல்லி:

அமெரிக்காவை தலைமையமாக கொண்ட காக்னிசன்ட் மொன்பொருள் நிறுவனத்தின் (சி.டி.எஸ்.) கிளைகள் இந்தியாவின் பல இடங்களில் உள்ளன. இதில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சி.டி.எஸ். நிறுவனம் 2016-17 ஆம் ஆண்டிற்கான வருமான வரியை முழுமையாக செலுத்த வில்லை என வருமான வரித்துறை புகார் அளித்துள்ளது. ரூ.2,500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்கள் விளக்கம் அளிக்காததையடுத்து, மும்பை மற்றும் சென்னையில் உள்ள சி.டி.எஸ். நிறுவனத்தின் வங்கிக்கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கி உள்ளனர். இதனை எதிர்த்து சி.டி.எஸ். நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை சி.டி.எஸ். நிறுவனம் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க கூடாது என நீதிமன்றம் வருமான வரித்துறையினரை வலியுறுத்தியது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நேற்று இடைக்கால தீர்ப்பளித்தது. காக்னிசன்ட் நிறுவனம் 2,500 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதில் 15 சதவீதம் அதாவது ரூ. 420 கோடியை இரண்டு நாட்களுக்குள் வருமான வரித்துறையினருக்கு செலுத்தவேண்டும். மேலும் வருமானத்துறையினரால் முடக்கப்பட்ட காக்னிசன்ட் நிறுவனத்தின் மும்பையில் ஜே.பி.மோகன் சேஸ் வங்கி கணக்கு மட்டும் விடுவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து முழு தீர்ப்பும் வெளிவரும் வரை மற்ற வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டிருக்கும் என நீதிமன்றம் அறிவித்தது. #Cognizant #india

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com