

அருப்புக்கோட்டை கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டதை அடுத்து இது தொடர்பாக மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டார். இந்த குழு தனது விசாரணை அறிக்கையை 12-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாக் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விசாரணை அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் கணேசன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.