கொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை

கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொள்ளை, அதை தொடர்ந்த கொலைகள் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு பேச சாமுவேல் மேத்யூ உள்ளிட்ட 7 பேருக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது. #SamuelMathew #KodanadEstate #EdappadiPalanisamy
கொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை
Published on

சென்னை:

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் விளைவிப்பதாக கூறி பத்திரிகையாளர் சாமுவேல் மேத்யூ மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் இன்று வழக்கு தொடரப்பட்டது.

மேலும், தன்மீது அவதூறான குற்றசாட்டுகளை பரப்பி வரும் சாமுவேல் மேத்யூவிடம்  மானநஷ்ட இழப்பீடாக 1.10 கோடி ரூபாய் கேட்டும் முதலமைச்சர் தரப்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொள்ளை, அதை தொடர்ந்த கொலைகள் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு பேச சாமுவேல் மேத்யூ, சயான், மனோஜ் உள்ளிட்ட 7 பேருக்கு தடை விதித்துள்ளது.

மேலும், உரிய ஆதாரங்கள் இல்லாத ஆவணங்களை அவர்கள் வெளியிடவும் தடை விதித்த நீதிமன்றம் இவ்வழக்கின் மறு விசாரணையை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. #SamuelMathew #KodanadEstate # EdappadiPalanisamy

X

Maalai Malar
www.maalaimalar.com