ம.பி: விபத்து மீட்பு பணியில் இருந்தவர்கள் மீது மோதிய லாரி - 7 பேர் பலி

மத்தியப்பிரதேசம் மாநிலம் பெட்டூல் மாவட்டத்தில் நேற்றிரவு நடந்த ஒரு விபத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.
ம.பி: விபத்து மீட்பு பணியில் இருந்தவர்கள் மீது மோதிய லாரி - 7 பேர் பலி
Published on

மத்தியப்பிரதேசம் மாநிலம் பெட்டூல் மாவட்டத்தில் உள்ள போர்தேகி கிராமத்திற்கு அருகே நேற்று இரவு ஒரு விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் அங்குள்ள மக்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுகொண்டிருக்கும் போது அங்கு வந்த மற்றொரு லாரி அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com