மதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனையை டெல்லி ஐகோர்ட் நிறுத்திவைத்துள்ளது. #MadhuKoda #CoalScam
மதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு
Published on

புதுடெல்லி:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2006 செப்டம்பரில் இருந்து 2008 ஆகஸ்ட் வரை மதுகோடா முதல்வராக இருந்தார். அப்போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி, நிலக்கரி சுரங்கங்களை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன்பேரில் மதுகோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலர் ஹெச்.சி.குப்தா, முன்னாள் ஜார்க்கண்ட் தலைமை செயலர் ஏ.கே. பாசு, நிலக்கரித்துறை செயலர் ஹரிஷ் சந்திரா உள்ளிட்ட 15 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இவ்வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், கடந்த டிசம்பர் மாதம் 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அப்போது, மதுகோடாவுக்கு மூன்று ஆண்டு சிறைதண்டனையும், 25 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன், மேல்முறையீடு செய்ய மதுகோடாவுக்கு இரண்டு மாத காலம் இடைக்கால ஜாமீனும் வழங்கப்பட்டது.

அதன்படி, மதுகோடா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மதுகோடாவுக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.  #MadhuKoda #CoalScam #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com