ராஜஸ்தான் மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உறவினர்களுடன் சபாநாயகர் ஓம் பிர்லா சந்திப்பு

ராஜஸ்தானில் மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினரை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று சந்தித்தார்.
உயிரிழந்த குழந்தையின் உறவினர்களை சந்தித்த ஓம் பிர்லா
உயிரிழந்த குழந்தையின் உறவினர்களை சந்தித்த ஓம் பிர்லா
Published on

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் கோடா நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 100-க்கு மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

இதற்கிடையே, ராஜஸ்தானில் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என அம்மாநில அரசை தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், மக்களவை சபாநாயகரும், கோடா தொகுதி பா.ஜ.க. எம்.பி.யுமான ஓம் பிர்லா இன்று ராஜஸ்தான் சென்றார். அங்கு, மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தையின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com