

தென்காசி மக்களவை தொகுதியில் 25 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் அ.ம.மு.க. வேட்பாளராக சு.பொன்னுத்தாய் போட்டியிடுகிறார். பொன்னுத்தாய் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதே பெயரில் உள்ள மேலும் சிலர் தென்காசி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், அ.ம.மு.க. வேட்பாளர் சு.பொன்னுத்தாய் மட்டுமின்றி, கோ.பொன்னுத்தாய், ம.பொன்னுத்தாய், மா.பொன்னுத்தாய் என ஒரே பெயரில் 4 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்கள் 4 பேருமே ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
என் பெயரில் எத்தனை பேர் போட்டியிட்டாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. அ.ம.மு.க.வின் பரிசுப் பெட்டி சின்னம் ஒரே நாளில் மக்களைச் சென்றடைந்துவிட்டது. அமமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே, எங்கள் வெற்றியை தடுக்க முடியாது” என்றார். #LokSabhaElections2019 #TenkasiConstituency