கியாஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் 5-வது நாளாக நீடிப்பு

கியாஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் 5-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருவதால் தமிழகம் உள்பட 6 மாநிலங்களிலும் ஓரிரு நாளில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
கியாஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் 5-வது நாளாக நீடிப்பு
Published on

சேலம்:

மண்டல அளவிலான வாடகை டெண்டர் முறை மாற்றப்பட்டு புதிதாக மாநில அளவிலான டெண்டர் முறை அமல்படுத்தப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென் மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த 12-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 14-ந் தேதி மும்பையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நேற்று நாமக்கல்லில் தென் மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கூடி ஆலேசானை நடத்தினர்.

அப்போது பெரும்பாலான உறுப்பினர்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர வேண்டும் என்று கூறியதால் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் 5-வது நாளாக இன்றும் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களில் கியாஸ் சிலிண்டர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தது.

இந்த போராட்டத்தால் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் மையங்களுக்கு கியாஸ் கொண்டு செல்லும் பணி முடங்கி உள்ளதால் சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் பணி முற்றிலும் பாதித்துள்ளது.

இதனால் தமிழகம் உள்பட 6 மாநிலங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் ஓரிரு நாளில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட்டால் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப பல நாட்கள் ஆகும் என்பதால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் 4500 லாரிகளில் பணிபுரிந்த 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் வேலை இழந்து பரிதவிப்புக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com