

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கொடுங்கத்தூரை சேர்ந்தவர் சசி. இவரது மகள் மீரா (வயது 24). இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தை உள்ளனர்.
பாலக்காடு கோல்பாடம் பகுதியை சேர்ந்தவர் சுபீர் என்பவரின் மகன் நவ்பல் (32). இவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர்.
இந்நிலையில் மீராவுக்கும், நவ்பலுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் குடும்பத்தை தவிக்க விட்டு கொச்சிக்கு சென்றனர்.
அங்கு போனேகரை மீன்ரோடு என்ற இடத்தில் வாடகைக்கு குடியேறினர். நவ்பல் அங்குள்ள இரும்பு கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் மீராவின் நடத்தையில் நவ்பலுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மீரா கடைத்தெருவிற்கு சென்றார். அங்கு ஒரு வாலிபருடன் அவர் பேசிக்கொண்டிருந்தார். இதனை வேலை முடிந்து அந்த வழியே வந்த நவ்பல் பார்த்து விட்டார். இருவரும் வீட்டுக்கு வந்தபோது இது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நவ்பல் தனது சகோதரிக்கு போன் செய்து மீராவை கொலை செய்து விட்டு தானும், தற்கொலை செய்ய போகிறேன் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். அதன்படி நேற்று இரவு மீராவை கத்தியால் சரமாரியாக நவ்பல் குத்தினார். இதில் ரத்தவெள்ளத்தில் மீரா இறந்தார்.
மீராவை கொலை செய்த பின்னர் மீண்டும் தனது சகோதரிக்கு போன் செய்து மீராவை கொன்று விட்டேன். கை மணிக்கட்டை அறுத்துக்கொண்டு நானும் தற்கொலை செய்யப்போகிறேன் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
குழந்தையுடன் மீராவின் தந்தை சசி.
ஜன்னலை உடைத்து பார்த்தபோது மீரா ரத்த வெள்ளத்திலும், நவ்பல் மணிக்கட்டு அறுத்த நிலையில் தூக்குப்போட்டும் இறந்தது தெரியவந்தது. மீராவின் 1½ வயது குழந்தை மட்டும் தாய் இறந்தது தெரியாமல் அங்கேயே இருந்தது.
இதனையடுத்து எலம்பக்கரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது உடல்களையும் மீட்டு கலமசேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.