காதல் திருமணம் செய்த இளம்பெண் சித்ரவதை- கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு

நாகர்கோவிலில் காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
காதல் திருமணம் செய்த இளம்பெண் சித்ரவதை- கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் நேசமணி நகர் பெஞ்சமின் தெருவைச் சேர்ந்தவர் சத்யா(வயது29). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நானும், விக்ரம் பிள்ளை என்பவரும் கடந்த டிசம்பர் மாதம் 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணத்தின் போது வரதட்சணை வேண்டாம் என கூறினார்கள்.

பின்னர் எனது கணவர் விக்ரம்பிள்ளை மற்றும் அவரது உறவினர்கள் சிலர் ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்கள்.

நான் கருவுற்று இருந்த போது அந்த கருவை கலைத்து விடுமாறு கூறினார்கள். அவர்கள் என்னை அடித்ததில் கருசிதைவு ஏற்பட்டு விட்டது. எனது கணவரும், அவரது நண்பரும், உறவினர்கள் சிலரும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர்.

எனது கணவர் நிலம் ஒன்றை விற்று ரூ.15 லட்சம் பணத்தை உறவினர்களுக்கு கொடுத்தார். அப்போது அவரது வீட்டையும் அடகு வைத்து பணம் தருமாறு கேட்டு வருகிறார்கள். இது தொடர்பாக நான் கேட்டால் என்னை அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள்.

எனவே எனது கணவர் உள்பட அனைவரும் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்த நாகர்கோவில் மகளிர் போலீசுக்கு உத்தர விடப்பட்டது. இன்ஸ்பெக்டர் சாந்தா குமாரி விசாரணை நடத்தினார்.

அந்த புகார் மனு மீது வழக்குபதிவும் செய்யப்பட்டுள்ளது. விக்ரம்பிள்ளை மற்றும் அவரது உறவினர்கள் 7 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 498(ஏ), 294(பி), 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com