தக்கலை அருகே காதல் திருமணம் செய்த பெண் விஷம் குடித்து தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை

தக்கலை அருகே குடும்ப தகராறில் காதல் திருமணம் செய்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தக்கலை அருகே காதல் திருமணம் செய்த பெண் விஷம் குடித்து தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை
Published on

தக்கலை:

தக்கலை அருகே கொற்றியோடு மணலிக்கரையைச் சேர்ந்தவர் ஜெயபால். தொழிலாளி. இவரது மனைவி நிஷா (வயது28).

இவர்கள் இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஜெயபால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறால் நிஷா மனம் உடைந்து காணப்பட்டார். திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை உறவினர்கள் காப்பாற்றி சிகிச்சைக்காக அழகியமண்டபத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நிஷா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஜெயபால் கொற்றியோடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவசங்கரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதற்கிடையில் பலியான நிஷாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது.

நிஷாவுக்கு திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் பத்மனாபபுரம் ஆர்.டி.ஓ. ராஜேந்திரன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com