நாமகிரிபேட்டை அருகே காதல் திருமணம் செய்த விவசாயி தற்கொலை

நாமகிரிபேட்டை அருகே கடன் பிரச்சனையில் காதல் திருமணம் செய்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாமகிரிபேட்டை அருகே காதல் திருமணம் செய்த விவசாயி தற்கொலை
Published on

ராசிபுரம்:

ராசிபுரம் தாலுகா, நாமகிரிபேட்டை அருகே உள்ள அரியாக்கவுண்டமபட்டி விளாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சதீஸ்குமார் (வயது 27). இவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் உள்ளது. கிணற்றில் தண்ணீர் இல்லை என்பதால் சதீஸ்குமார் ரூ.2 லட்சம் கடன் வாங்கி ஆழ்துளை கிணறு போட்டுள்ளார். அதிலும் தண்ணீர் வரவில்லை. 2 லட்சம் கடன் வாங்கி ஆழ்துளை கிணறு போட்டும் தண்ணீர் வரவில்லையே என்று மனம் உடைந்த விவசாயி சதீஸ்குமார் கடந்த 26-ந் தேதி அவரது வீட்டில் வைத்திருந்த கலைக்கொல்லி மருந்தை குடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

உடனடியாக அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தபின்பு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சதீஸ்குமார் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். சதீஸ்குமார் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு தாராபேகம் (25) என்ற முஸ்லீம் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வர்ஷினி (6) என்ற மகளும், மவுனிக்குமார் (3) என்ற மகனும் உள்ளனர். பிரேத பரிசோதனைக்காக சதீஸ்குமார் உடல் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இது பற்றி நாமகிரிபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com