சாமல்பட்டி அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை

சாமல்பட்டி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சாமல்பட்டி அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை
Published on

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே உள்ள சந்தாகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 23). இவரது மனைவி அருள்ஜோதி (20). 

இவர்கள் 2 பேரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு உறவினர்களை பிரிந்து தனியாக ஒரு வீட்டில் இவர்கள் வசித்து வந்தனர். நேற்று கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மனைவியுடன் சண்டை போட்ட கதிர்வேல் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். 

வீட்டில் தனியாக இருந்த அருள்ஜோதி பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இது குறித்து சாமல்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரப்பன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார். திருமணமான 5 மாதத்தில் அவர் இறந்து போனதால் வரதட்சணை கொடுமைக்காரணமாக அவர் இறந்தாரா? என்பது குறித்து தர்மபுரி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com