மதுரையில் காதல் விவகாரத்தில் இருதரப்பினர் மோதல்

காதல் விவகாரத்தில் இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் காதல் விவகாரத்தில் இருதரப்பினர் மோதல்
Published on

பேரையூர்:

மதுரை கப்பலூரை சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவரது மகன் மணிபாண்டி (வயது23). அதே ஊரைச் சேர்ந்தவர் தினேஷ். இவரும், மணிபாண்டியின் தங்கையும் காதலித்தனர்.

சம்பவத்தன்று மணிபாண்டியின் செல்போனில் இருந்து தினேசிடம் காதலி பேசி உள்ளார். அதன் பின்னர் அந்த செல்போனுக்கு தினேஷ் சில தகவல்களை பறிமாறி உள்ளார்.

இது மணிபாண்டிக்கு தெரியவந்ததும் தினேசை கண்டித்தார். இதுதொடர்பாக அவர்களிடையே விரோதம் ஏற்பட்டது.

சம்பவத்தன்று உச்சப்பட்டி சுடுகாடு அருகே மணிபாண்டி நின்று கொண்டிருந்தபோது தினேஷ், அவரது நண்பர் அப்புக்குட்டி என்ற குரு அங்கு வந்தனர். அவர்கள் மணிபாண்டியிடம் வாக்கு வாதம் செய்து தாக்கவும் செய்தனர்.

இதனை தொடர்ந்து மணிபாண்டி தனது நண்பர்களை அழைத்து வந்து தினேஷ் மற்றும் அப்புக்குட்டியை தாக்கினார். இதுதொடர்பாக இருதரப்பினரும் போலீசில் புகார் செய்தனர்.

மணிபாண்டி புகாரின் பேரில் தினேஷ் மற்றும் அப்புக்குட்டி மீதும், அப்புக்குட்டி புகாரின்பேரில் மணிபாண்டி, பாலு, வெற்றி, நடேசன், ஜெயக்கண்ணன் ஆகியோர் மீது ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com