களக்காடு அருகே காதல் தோல்வியால் கட்டிட தொழிலாளி தற்கொலை

களக்காடு அருகே காதல் தோல்வியால் மன உளைச்சல் அடைந்த கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
களக்காடு அருகே காதல் தோல்வியால் கட்டிட தொழிலாளி தற்கொலை
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் இசக்கிபாண்டி (வயது 47). இவர் தற்போது கோவையில் மனைவி மற்றும் 3 மகன்களுடன் வசித்து வருகிறார்.

இவரது 2-வது மகன் குமார் (18). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர் தனது உறவினர் பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தாராம். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இசக்கி பாண்டி தனது மகன் குமாருடன் பொங்கல் விடுமுறைக்காக சுந்தரபாண்டியபுரத்திற்கு வந்துள்ளார். காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்த குமார் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து இசக்கி பாண்டி களக்காடு போலீசில் புகார் செய்தார். களக்காடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com