பெண் என்ஜினீயர் காதலனுடன் தஞ்சம் - காதல் ஜோடியை வாழ்த்தி அனுப்பி வைத்த பெற்றோர்

இரணியில் பெண் என்ஜினீயர் காதலனுடம் தஞ்சம் அடைந்ததையடுத்து காதல் ஜோடியை அவரது பெற்றோர் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
காதல் ஜோடி
காதல் ஜோடி
Published on

இரணியல்:

இரணியல் பொட்டல் குழி பகுதியைச் சேர்ந்தவர் முருகன், (வயது 48). இவரது மகள் கவிதா (23). என்ஜினீயர் பட்டதாரி.

இவர், கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். தற்போது திங்கள்நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற கவிதா வீடு திரும்பவில்லை.

இதையடுத்து கவிதாவை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் அவர், கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாயார் வசந்தா, இரணியல் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கவிதாவை தேடி வந்தனர்.

அவரது செல்போன் டவர் உதவியுடன் போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். அப்போது கவிதா, மதுரை வாடிப்பட்டி பகுதியில் இருப்பது தெரிய வந்தது. போலீசார் அவரை தொடர்பு கொண்டு பேசினார்கள்.

இந்த நிலையில் கவிதா, தனது காதலன் கார்த்திக்குடன் இரணியல் போலீசில் தஞ்சம் அடைந்தார். கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கும்போது, அதே நிறுவனத்தில் வேலை பார்த்த கார்த்திக்குடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிவித்தார். தன்னை யாரும் கடத்திச் செல்லவில்லை. நான், விருப்பப்பட்டுதான் கார்த்திக்குடன் சென்றேன். இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டோம். இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறினார்.

போலீசார் கவிதாவின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்கள் மகள் வாழ்க்கை தான் முக்கியம். அவள் சந்தோ‌ஷமாக இருந்தால் போதும் என்று கூறி விட்டு போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். போலீசார் காதல் ஜோடியை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com