மதுரையில் லாட்டரி சீட்டு விற்றவர் சிக்கினார்

மதுரையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

மதுரை:

மதுரை கரிமேடு போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பெத்தானியாபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த முதியவரை பிடித்து விசாரித்தனர். 

அதில் தீக்கதிர் பகுதியை சேர்ந்த சின்னச்சாமி(வயது 76) என்பதும், இவர் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்றதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 55 வெளிமாநில லாட்டரி சீட்டுகள், 1,610 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com