தென்காசி மாவட்டத்தில் லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேர் கைது

தென்காசி மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேரை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

தென்காசி:

சிவகிரி போலீசார் ராயகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த அதேபகுதியை சேர்ந்த ராமராஜ் என்பரை கைது செய்தனர். 

அதேபோல் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக சொக்கம்பட்டி போலீசார் சிங்கிலிபட்டி பகுதியில் முருகன் என்பவரையும், வாசு தேவநல்லூர் போலீசார் பேருந்து நிலையம் அருகே காளியப்பன்(60) என்பவரையும், ஆலங்குளம் போலீசார் முரளி கிருஷ்ணன் (34) என்பவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com