தொழிலில் நஷ்டம்: வியாபாரி வி‌ஷம் குடித்து தற்கொலை

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ‘மிக்சர்’ வியாபாரி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

மதுரை:

உசிலம்பட்டியை அடுத்த சி.நாட்டாப்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது 30). இவர் கர்நாடக மாநிலத்தில் ‘மிக்சர்’ வியாபாரம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் சுந்தருக்கு தொழிலில் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார்.

வாழ்க்கையில் விரக்தி அடைந்த சுந்தர் சம்பவத்தன்று காலை வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுந்தர் பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் அழகர்கோவில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ராமசாமி (34). இவரது மனைவி கார்த்திகா, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன் -மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் குடிப்பழக்கத்திற்கு ஆளான ராமசாமி நேற்று அழகர் கோவில் சமுதாய நலக்கூடத்தில் இறந்து கிடந்தார்.

இது தொடர்பாக அப்பன் திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com