

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ளது சேசம்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 30). லாரி அதிபர். இவருக்கு சொந்தமாக 3 லாரிகள் உள்ளன. இந்த நிலையில் செல்வகுமார் ஒரு லாரியில் சரக்குகளை ஏற்றி கொண்டு வெளியூருக்கு சென்று விட்டு நேற்று காலையில் வீடு திரும்பினார்.
அப்போது அவர் விரக்தியில் இருந்ததாக தெரிகிறது. அவரது மனைவி காமாட்சி கோவிலுக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறி விட்டு சென்றார். அதற்குள் செல்வகுமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி அதிபர் ஏன்? எதற்காக? தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். #tamilnews