சேலத்தில் லாரி அதிபர் தூக்குபோட்டு தற்கொலை

சேலத்தில் லாரி அதிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலத்தில் லாரி அதிபர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

மேட்டூர்:

சேலம் மாவட்டம் கொளத்தூரில் உள்ள சத்தியாநகரைச் சேர்ந்தவர் கருணாகரன் (வயது 36). இவர் சொந்தமாக லாரியை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தி வந்தார்.

இவருக்கு வசந்தா என்ற மனைவியும், பூபதி என்ற மகனும், மதுமிதா என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த கருணாகரன் திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் கொளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கருணாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடன் தொல்லை காரணாக தூக்குப்போட்டு கொண்டாரா? அல்லது குடும்ப தகராறு காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com