கோவை ஆனைமலையில் லாரி அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை

கோவை ஆனைமலையில் குடும்ப தகராறில் லாரி அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை
தற்கொலை
Published on

கோவை:

கோவை மாவட்டம் ஆனைமலை ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது54). லாரி அதிபர். இவர் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரி இல்லாமல் அவதிப்பட்டு வந்தார். மேலும் குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது வந்தது. சம்பவத்தன்று மீண்டும் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.

இதனால் பழனிசாமியின் மனைவி கோபித்துக்கொண்டு தன் குழந்தையை அழைத்துக்கொண்டு மாமியார் வீட்டுக்கு சென்று விட்டார். மனவேதனை அடைந்த பழனிசாமி வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டு சமையல் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வெகு நேரமாக வீட்டின் கதவு பூட்டி இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் திறக்கவில்லை. பின்னர்ஜன்னல் வழியாக பார்த்தபோது அவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கோவை கிணத்துக்கடவை சேர்ந்தவர் செல்லான் (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரி இல்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார்.

ஆனால் குணமாகவில்லை. இதனால் மனவேதனை அடைந்த செல்லான் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். அவரது குடும்பத்தினர் அவரை அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர். அப்போது நல்லிகவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் செல்லான் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

பின்னர் இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com