குப்பை லாரியில் மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

புதுவையில் குப்பை லாரியில் மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
விபத்து
விபத்து
Published on

புதுச்சேரி:

புதுவை முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கலைமணி (வயது 53). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து கலைமணி மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிகொண்டிருந்தார்.

சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே சென்றபோது முன்னால் சென்ற குப்பை லாரி திடீரென திரும்பியதால் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த கலைமணியை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கலைமணி இறந்விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கிழக்குபோக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com