அரவக்குறிச்சி அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்: நிதி நிறுவன அதிபர் பலி

அரவக்குறிச்சி அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நிதி நிறுவன அதிபர் பலியானார்.
விபத்து
விபத்து
Published on

அரவக்குறிச்சி:

திருப்பூர் மாவட்டம் அறிக்காரன்வலசு அருகே மாமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 41). இவர் அதே பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் அரவக்குறிச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது சீத்தப்பட்டி காலனி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, கரூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற லாரியும், செல்வக்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் மோதி கொண்டன. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செல்வக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com