தர்மபுரி அருகே பஸ்சில் வந்த லாரி டிரைவர் மர்ம மரணம்

தர்மபுரி அருகே பஸ்சில் வந்த லாரி டிரைவர் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இவரது சாவில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
மரணம்
மரணம்
Published on

தர்மபுரி

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது65). லாரி டிரைவரான இவர் நேற்று பஸ்சில் தர்மபுரி நோக்கி வந்தார். அப்போது பஸ் தொப்பூர் அருகே வந்தபோது பஸ்சில் இருந்த பழனிசாமி திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பழனிசாமியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த உறவினர்கள் உடனே அங்கு வந்து பழனிசாமியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறினர். இதுகுறித்து அவர்கள் தொப்பூர் போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். 

உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பழனிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பழனிசாமி மாரடைப்பால் இறந்தாரா? அல்லது விஷம் குடித்து இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com