அரூர் அருகே கொலை மிரட்டல் விடுத்த லாரி டிரைவர் கைது

அரூர் அருகே ஆட்டோ டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்துள்ள ஆத்தோர வீதி பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (வயது 27). ஆட்டோ ஓட்டுனர். இவர் நேற்று அரூர் பஸ்நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தபோது. அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ரீகன் (29) என்பவர் ஆட்டோவை வாடகைக்கு அழைத்துள்ளார். 

இந்த நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட ரீகன் கல்லை வைத்து ஸ்டீபன் ராஜை தாக்கியுள்ளார். மேலும் ரீகன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். 

இதுகுறித்து ஸ்டீபன்ராஜ் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரீகனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com