தொப்பூர் கணவாயில் சிமெண்ட் லாரி கவிழ்ந்து விபத்து

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் சிமெண்ட் லாரி திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் லேசான காயம் அடைந்தார்.
விபத்து
விபத்து
Published on

இண்டூர்:

ஆந்திர மாநிலத்தில் இருந்து கேரளா நோக்கி சிமெண்ட் பாரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கரூரை சேர்ந்த சங்கம்பிள்ளை என்பவர் ஓட்டி வந்தார்.

அப்போது நேற்றிரவு தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் அருகே வரும் போது லாரி டிரைவரின் கட்டு பாட்டை இழந்து திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய லாரியை அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com