

சித்தோடு:
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா சக்திபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (34). திருப்பூர் பனியன் கம்பெனியில் தங்கி பணியாற்றி வந்தார். இந்நிலையில் சொந்த ஊரில் வாக்களிக்க டிரைவர் நவீன் (வயது24) ஓட்டி சென்ற ஆம்னி காரில் சென்று மீண்டும் திருப்பூர் சென்று கொண்டு இருந்துள்ளனர்.
காரில் ஜெகநாதன் (34), விஜயலட்சுமி, தரணி, கலைச்செல்வி, சுமதி, சந்திரசேகர், ராஜா ஆகியோர் சென்றனர். ஆம்னி கார் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமி நகர் அருகில் உள்ள சமத்துவபுரம் மேட்டில் வந்து கொண்டு இருந்தது. இன்று அதிகாலை 4 மணியளவில் முன்னால் சென்ற லாரி மீது கார் எதிர் பாராதவிதமாக மோதியது.
இதில் காரில் சென்ற 9 பேரில் 2 பேருக்கு பலத்த காயமும், 7 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. காயம் ஏற்பட்ட இவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக சித்தோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.