திருக்கோவிலூரில் லாரி மீது பஸ் மோதல்- 14 பேர் படுகாயம்

திருக்கோவிலூரில் இன்று காலை லாரி மீது பஸ் மோதிய விபத்தில் ஆன்மிக சுற்றுலா சென்ற 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்துக்குள்ளான பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்திருப்பதை படத்தில் காணலாம்.
விபத்துக்குள்ளான பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்திருப்பதை படத்தில் காணலாம்.
Published on

திருக்கோவிலூர்:

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராணி(வயது45), ரங்கசாமி (42),நாகராஜ்(55),ராஜகாந்தம்(50)ஆகியோர் ஆன்மிக சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி ராணி உள்பட 55 பேரும் ஒரு பஸ்சில் புதுக்கோட்டையில் இருந்து திருப்பதி கோவிலுக்கு புறப்பட்டனர்.

அந்த பஸ் இன்று காலை விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் புறவழிச் சாலையில் வந்து கொண்டிருந்தது.

அப்போது அதே பகுதியில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை பஸ் டிரைவர் முந்தி செல்ல முயன்றார். அப்போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த பஸ் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரி மீது மோதியது.

இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது. இந்த விபத்தில் பஸ் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த ராணி, ரங்கசாமி,நாகராஜ், ராஜகாந்தம் ஆகியோர் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த 14 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கபட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபடுகிறது.

விபத்து குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com