தா.பேட்டை அருகே லாரி-அரசு பஸ் மோதல்: 9 பேர் படுகாயம்

தா.பேட்டை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பயணிகளை ஏற்றி வந்த அரசு பேருந்து மோதியதில் பெண் காவலர் உள்பட 9 பேர் காயமடைந்தனர்.
தா.பேட்டை அருகே லாரி-அரசு பஸ் மோதல்: 9 பேர் படுகாயம்
Published on

தா.பேட்டை:

துறையூர் பேருந்து நிலையத்திலிருந்து கண்ணனூர் வழியாக முசிறி செல்வதற்காக பயணிகளை ஏற்றி கொண்டு அரசுபேருந்து புறப்பட்டு சென்றது. அப்போது அந்த பேருந்து ஜெம்புநாதபுரம் அடுத்த வாளவந்தி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் அரசுபேருந்து மோதியது.

இந்த விபத்தில் அரசு பேருந்து டிரைவர் உப்புலியபுரம் கண்ணன்(40), நடத்துனர் சிக்கத்தம்பூர் ஜெயராஜ்(50), முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் சுபாஷினி(36), முசிறியை சேர்ந்த பிரியா(29), சார்லஸ்(37), அலமேலு(55), செல்லம் மாள்(60), கொளக் குடியை சேர்ந்த ஷிலா(27), பகள வாடியை சேர்ந்த மாலதி(36), உள்பட 9 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் காயம் அடைந்தவர்கள் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். சம்பவம் குறித்து ஜெம்பு நாதபுரம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த அரசு பேருந்தில் சுமார் 15 பயணிகள் மட்டுமே இருந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com