தர்மபுரி அருகே முன்னால் சென்ற லாரி மீது பஸ் மோதி 8 பேர் காயம்

தர்மபுரி அருகே முன்னால் சென்ற லாரி மீது பஸ் மோதியதில் 8 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தர்மபுரி அருகே முன்னால் சென்ற லாரி மீது பஸ் மோதி 8 பேர் காயம்
Published on

தர்மபுரி:

பெங்களூருவில் இருந்து அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு கோவைக்கு சென்றது. அப்போது தர்மபுரி அருகே உள்ள குண்டலபட்டி கால்நடை ஆராய்ச்சி மையம் அருகில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி வலது பக்கமாக திரும்புபோது எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறம் பஸ் மோதியது.

இந்த விபத்தில் சேலத்தை சேர்ந்த பழனிசாமி, தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த பழனியப்பன், கோவையைச் சேர்ந்த கண்ணம்மாள், பிரபா, பொள்ளாச்சியைச் சேர்ந்த ரேஷ்மா, பெரியாம்பட்டியைச் சேர்ந்த சிங்காரம் மற்றும் அபிராமி, நாகராஜ் ஆகிய 8 பேர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து மதிகோண்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com