சேத்துப்பட்டில் லாரி, அரசு பஸ் மோதல்- 15 பயணிகள் படுகாயம்

சேத்துப்பட்டில் லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 15 பயணிகள் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டில் லாரி, அரசு பஸ் மோதல்- 15 பயணிகள் படுகாயம்
Published on

சேத்துப்பட்டு:

பெங்களூருவில் இருந்து செய்யாறுக்கு இன்று காலை பயணிகளுடன் அரசு பஸ் வந்துக் கொண்டிருந்தது. செஞ்சி சாலையில் சேத்துப்பட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அருகே வந்தபோது சாலையோரமாக நின்றிருந்த லாரியின் பின்னால் அரசு பஸ் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பஸ்சின் முகப்பு கண்ணாடி உடைந்து சுக்கு நூறாக சிதறியது. டிரைவர் ராமு, கண்டக்டர் சிவலிங்கம் மற்றும் பயணிகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com