

செங்குன்றம்:
சென்னை வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதன் நகரைச் சேர்ந்தவர் ஜெயந்த்(வயது 25). ஏ.சி.மெக்கானிக். இவர், தனது நண்பரான கொளத்தூர் புதிய
லட்சுமி குலத்தைச் சேர்ந்த சீனிவாசன்(29) என்பவருடன் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் மாதவரத்தில் இருந்து பாடி நோக்கி சென்று
கொண்டிருந்தார்.
பாடி மேம்பாலத்தில் சென்றபோது அவர்களுக்கு பின்னால் மாதவரத்தில் இருந்து போரூர் நோக்கி வந்த லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது
மோதியது. இதில் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி
ஜெயந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது நண்பரான சீனிவாசன் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.