சுமலதாவுக்கு பிரசாரம் செய்வதால் கொலை மிரட்டல் வருகிறது- நடிகர் யஷ் பேச்சு

பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் நடிகை சுமலதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதால் கொலை மிரட்டல் வருகிறது என்று நடிகர் யஷ் பேசினார். #LoksabhaElections2019 #Yash #Sumalatha
சுமலதாவுக்கு பிரசாரம் செய்வதால் கொலை மிரட்டல் வருகிறது- நடிகர் யஷ் பேச்சு
Published on

மாண்டியா:

நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷின் மனைவி நடிகை சுமலதா பாராளுமன்றத் தேர்தலில் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கி உள்ளார்.

இந்த தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் வேட்பாளராக நிற்கிறார். இவருக்கு ஆதரவாக குமாரசாமி, தேவகவுடா ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே சுமலதா அம்பரீஷை ஆதரித்து கன்னட நடிகர்கள் தர்‌ஷன், யஷ் ஆகியோர் அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர்.

யஷ் கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர். சமீபத்தில் வெளியான ‘கே.ஜி.எப்’ படம் மூலம் இவருக்கு கர்நாடகாவில் அதிகமான ரசிகர்கள் உருவாகி இருக்கிறார்கள்.

இவர்களது பிரசாரத்தில் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று பிரசாரத்தில் பேசிய யஷ் ‘அம்பரீஷ் உயிருடன் இருந்தபோதில் இருந்தே நாங்கள் அவர் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்துவருகிறோம். எங்களுக்கு சில கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. ஆனால் அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்’ என்று பேசினார். #LoksabhaElections2019 #Yash #Sumalatha

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com