எதிர்க்கட்சிகள் தொடர் அமளி - மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பாராளுமன்றத்தின் மக்களவை இன்றும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #BudgetSession #LokSabha #Adjourned
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி - மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு கடந்த வாரம் திங்கட்கிழமை தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பி.என்.பி. வங்கி மோசடி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று காலை மக்களவை தொடங்கியது. சிறிது நேரத்தில் தெலுங்கு தேசம் கட்சி, காங்கிரஸ், அ.தி.மு.க., தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.  #BudgetSession #LokSabha #Adjourned  #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com