கோத்தகிரி அருகே பூட்டை உடைத்து டாஸ்மாக் கடையை சூறையாடிய பெண்கள்

கோத்தகிரி அருகே பூட்டை உடைத்து டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கி பெண்கள் சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோத்தகிரி அருகே பூட்டை உடைத்து டாஸ்மாக் கடையை சூறையாடிய பெண்கள்
Published on

கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது எம்கைகாட்டி. இங்குள்ள சாலை அருகே டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது.

இந்த மதுக்கடையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அந்த பகுதி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தனர். புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்காததால் 3 முறை போராட்டம் நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் கடையை அப்புறப்படுத்துவதாக உறுதியளித்தனர். ஆனால் மதுக்கடை அகற்றப்படாமல் செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் இன்று காலை அப்பகுதியை சேர்ந்த 20 பெண்கள் உள்பட பொதுமக்கள் டாஸ்மாக்கடை முன்பு திரண்டனர். 12 மணிக்கு முன்பு வந்ததால் கடை திறக்கப்படவில்லை.

ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு இருந்த மதுபாட்டில்களை சாலையில் வீசி உடைத்தனர். பின்னர் மதுக்கடையை முற்றிலும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com