

உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னையன். விவசாயி. இவர் ஏராளமான ஆடுகள் வளர்த்து வருகிறார். காலை நேரத்தில் ஆடுகளை வயல்வெளியில் மேய்த்துவிட்டு மாலை நேரம் கொட்டகையில் அடைப்பதுண்டு.
அதன்படி நேற்று மாலை ஆடுகளை மேய்த்துவிட்டு கொட்டகையில் அடைத்து வைத்திருந்தார். நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இடி-மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது.
அப்போது மின்னல் தாக்கியதில் ஆட்டு கொட்டகை பற்றி எரிந்தது. அங்கு அடைக்கப்பட்டிருந்த 65 ஆடுகள் கருகி இறந்தது. இதனை பார்த்து விவசாயி சின்னையன் அதிர்ச்சியடைந்தார்.
தகவல் அறிந்த வருவாய் துறையினர் நேரடியாக விசாரணை நடத்தினர். இதுபற்றி அறிந்த குமரகுரு எம்.எல்.ஏ.வும் நேரில் சென்று சின்னையனுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.