திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்னல் தாக்கி 21 ஆடுகள் பலி

திருவெண்ணெய்நல்லூர் அருகே நள்ளிரவு திடீரென பெய்த மழையின்போது மின்னல் தாக்கி 21 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.
மின்னல் தாக்கி 21 ஆடுகள் இறந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
மின்னல் தாக்கி 21 ஆடுகள் இறந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
Published on

அரசூர்:

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கண்ணாரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் (வயது 50). இவர் 50-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆடுகளை, ஆட்டுப்பட்டியில் அடைத்து வைத்துள்ளார். அப்போது நள்ளிரவு திடீரென பெய்த மழையின்போது மின்னல் தாக்கியதில் 21 ஆடுகள் பரிதாபமாக செத்தன. 5 ஆடுகளின் கண் பார்வை பறிபோனது. 

இந்த சம்பவம் தொடர்பாக கால்நடை மருத்துவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com