இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே நியமனம்

இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய ராணுவத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவனே
இந்திய ராணுவத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவனே
Published on

புதுடெல்லி:

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக செயல்பட்டுவருபவர் பிபின் ராவத். இவர் கடந்த 2016 டிசம்பர் 31-ம் தேதி ராணுவ தலைமை தளபதி பொறுப்பை ஏற்றார்.

இந்நிலையில், பிபின் ராவத்தின் பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் (டிசம்பர் 31) நிறைவடைகிறது. இதையடுத்து இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

1980-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் சீக்கிய லைட் படைப்பிரிவில் தனது ராணுவ சேவையைத் தொடங்கிய மனோஜ் முகுந்த் நரவனே, தற்போது இந்திய ராணுவத்தின் துணை தலைமை தளபதியாக செயல்பட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com