

புதுடெல்லி:
டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் அருண் ஜெட்லி தலைவராக இருந்த போது பல கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் நடந்ததாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் 3 பேர் குற்றம் சாட்டினர். இதனால் அவர்கள் மீது கோர்ட்டில் அருண் ஜெட்லி அவதூறு வழக்கு தொடர்ந்தார். ரூ.10 கோடி மானநஷ்ட ஈடு கேட்டிருந்தார்.
இந்த நிலையில் கெஜ்ரிவால் உள்ளிட்ட 4 பேரும் நேற்று அருண் ஜெட்லியிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பியிருந்தனர். இதை அருண் ஜெட்லியும் ஏற்றுக் கொண்டார். எனவே இந்த வழக்கை முடித்து வைக்குமாறு அவரும், கெஜ்ரிவால் உள்ளிட்ட 4 பேரும் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அருண் ஜெட்லி மற்றும் கெஜ்ரிவால் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதி அறிவித்தார். #ArvindKejriwal #ArunJaitley