ஸ்ரீநகர் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு: லஷ்கர் இ தொய்பா அமைப்பு பொறுப்பேற்றது

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மருத்துவமனையில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி, அங்கிருந்து பாகிஸ்தான் கைதியை தப்ப வைத்தனர். இந்த சம்பவத்துக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். #JammuAndKashmir
ஸ்ரீநகர் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு: லஷ்கர் இ தொய்பா அமைப்பு பொறுப்பேற்றது
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மருத்துவமனையில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி, அங்கிருந்து பாகிஸ்தான் கைதியை தப்ப வைத்தனர். இந்த சம்பவத்துக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். #JammuAndKashmir

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீமகாராஜ் ஹரி சிங் மருத்துவமனையில் பாகிஸ்தான் கைதி நவீத்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக போலீசார் நேற்று அழைத்து வந்தனர். மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த மருத்துவமனைக்குள் புகுந்த தீவிரவாதிகள் சிலர், போலீஸ்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் கைதியை தீவிரவாதிகள் மீட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். தீவிரவாதிகள் தாக்குதலில் 2 போலீசார் பலியாகினர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் மருத்துவமனையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்ப்னர் பொறுப்பேற்றுள்ளனர்.

இதுதொடர்பாக, அந்த அமைப்பின் தலைவர் மஹ்மூத ஷா தனது இமெயிலில் கூறுகையில், ஸ்ரீநகர் மருத்துவமனை தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பேற்றுள்ளோம் என தெரிவித்துள்ளார். #JammuAndKashmir  #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com