‘மேக் இன் இந்தியா’ வெறும் பேச்சளவில்தான் இருக்கிறது - விமானப்படை தளபதி சொல்கிறார்

ஆயுத தளவாடங்கள் உற்பத்தியை பொறுத்தவரை, ‘மேக் இன் இந்தியா’ திட்டம் வெறும் பேச்சளவில் இருப்பதாக விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா
இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா
Published on

புதுடெல்லி:

இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா, ஒரு டெலிவிஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது:-

எல்லாவற்றையும் உள்நாட்டிலேயே தயாரிப்பதை ஊக்குவிக்க ‘மேக் இன் இந்தியா’ திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், ஆயுத தளவாடங்கள் உற்பத்தியை பொறுத்தவரை, இந்த திட்டம் வெறும் பேச்சளவில்தான் இருக்கிறது. நமது நோக்கம் நல்லதுதான். ஆனால், நடைமுறையில் பணிகள் மிகவும் மெதுவாக நடக்கின்றன. எல்லா அமைப்புகளும், நிறுவனங்களும் இந்த திசையில் செயல்பட்டால், நமக்கு வெற்றி கிடைக்கும்.

அதற்கு எங்கள் ஆதரவை அளித்துள்ளோம். ஆயுத தளவாட உற்பத்தியில் தனியாரின் பங்களிப்பை பொதுத்துறை நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com