குமுளி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது

குமுளி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
நெல்லிமலை தேயிலை வனப்பகுதியில் கூண்டில் சிக்கிய சிறுத்தை
நெல்லிமலை தேயிலை வனப்பகுதியில் கூண்டில் சிக்கிய சிறுத்தை
Published on

கூடலூர்:

கேரள மாநிலம் குமுளி அருகே நெல்லி மலையைச் சேர்ந்தவர் சஜி சாக்கோ. இவரது வீட்டின் கொட்டகையில் கட்டப்பட்டு இருந்த ஒரு ஆட்டை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு சிறுத்தை தாக்கி கொன்றது.

இதில் மற்றொரு ஆடு படுகாயத்துடன் தப்பியது. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியில் நடமாட அச்சமடைந்தனர். வனத்துறையினர் அறிவுறு த்தலின் பேரில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டதில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து குமுளி ரேஞ்சர் ரதீஸ், வனத்துறை அதிகாரிகள் போல்சன், செபாஸ்டின், அபுவினய் பிரகாஷ் மற்றும் தேக்கடி வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க அப்பகுதிகளில் கூண்டு வைத்தனர்.

நெல்லி மலை தேயிலை காட்டு பகுதியில் வைக்கப்பட்டு இருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. இதனையடுத்து அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சிறுத்தையை பார்வையிட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் கூண்டில் பிடிக்கப்பட்ட சிறுத்தை கோழிக்கானம் பகுதியில் உள்ள வனத்தில் கொண்டு போய் விடப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com