

ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடர் போட்டிகள் அமெரிக்காவில் உள்ள நாக்ஸ்வில் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் முதல்நிலை ஜோடியான இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி, அமெரிக்காவின் கெவின் கிங் - பிராட்லி ஜோடியை எதிர்கொண்டது.
இப்போட்டியின் முதல் செட்டை 6-2 என இந்திய ஜோடி கைப்பற்றியது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அந்த ஜோடி இரண்டாவது செட்டையும் 6-4 என கைப்பற்றியது. இதன்மூலம் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஜோடி காலிறுதி சுற்று போட்டியில் பிரட்டனின் மார்கஸ் வில்லிஸ் - லியாம் பிராடே ஜோடியை எதிர்கொள்ள இருக்கிறது.